சமூக வலைதளம்

அடுத்தமுறை 100% இலக்கை அடைவோம்: இஸ்ரோவுக்கு கனிமொழியின் ஆறுதல் ட்வீட்

செய்திப்பிரிவு

அடுத்தமுறை 100% இலக்கை அடைவோம் என இஸ்ரோ மையத்துக்கு ஆறுதல் தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார் திமுக எம்.பி. கனிமொழி.

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்காத நிலையில், ஆர்ப்பிட்டர் வெற்றியை சுட்டிக் காட்டி பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் இஸ்ரோ மையத்துக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்து ட்வீட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில் திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்ட ட்வீட்டில், "இந்த முறை 95% பணி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தமுறை 100% பணியும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

இஸ்ரோவுக்கும் அதன் தலைவர் சிவனுக்கும் நன்றி. தேசம் இந்த சாதனையை நினைத்து பெருமிதம் கொள்கிறது. இஸ்ரோவின் பயணத்துக்குப் பின்னால் 100 கோடி மக்கள் துணை நிற்கின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.

நிலவின் தென் துருவ ஆராய்ச்சியில் 90%-ஐ ஆர்ப்பிட்டரே மேற்கொள்கிறது. அதனால் சந்திரயான் 2 மிஷன் அந்தளவில் வெற்றி என்றே விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT