சமூக வலைதளம்

விமான நிலையத்தில் உதவியாளரை கன்னத்தில் அறைந்த சித்தராமையா

செய்திப்பிரிவு

மைசூரு,

கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா தனது உதவியாளரை கன்னத்தில் அறைந்த காட்சி வைரலாகி வருகிறது.

முன்னதாக, கட்சியினருடன் மைசூரு விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
பத்திரிகையாளர்களை சந்தித்துவிட்டு அவர் திரும்பியபோது அருகில் இருந்தவர் சித்தராமையாவிடம் ஏதோ கூறுவதுபோல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. உடனே சித்தராமையா அந்த நபரின் கன்னத்தில் அறைகிறார். அவரை தள்ளவும் செய்கிறார். ஆனால் அந்த நபர் எவ்வித சலனமும் இல்லாமல் சித்தராமையாவுடன் செல்கிறார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் சித்தராமையா ஒருவரின் கன்னத்தில் அறைந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

SCROLL FOR NEXT