சமூக வலைதளம்

ரயிலைக் கவனிக்காமல் கடக்க முயன்ற பெண்: வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

குல்பர்கா

கர்நாடகாவில் ரயில் வருவதைக் கவனிக்காமல், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் ஒருவர், சாதுரியமாகச் செயல்பட்டதால் உயிர் தப்பினார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். சாலையின் மறு பக்கத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால், தண்டவாளத்தைக் கடந்துசெல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் ஒன்று விரைந்து வந்தது.

அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கூக்குரலிட்டனர். உடனே சாதுரியமாகச் செயல்பட்ட அப்பெண், தண்டவாளத்திலேயே படுத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து ரயிலும் அவர் மீது படாமல் தாண்டிச் சென்றது. அப்பெண்மணியும் காயங்கள் எதுவும் படாமல், தப்பிப் பிழைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT