சமூக வலைதளம்

இந்திய சிறார்களின் ஜிம்னாஸ்டிக் திறனைப் பாராட்டிய பிரபல வீராங்கனை

செய்திப்பிரிவு

இந்திய சிறார்கள் இருவரது ஜிம்னாஸ்டிக் திறனை பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா பாராட்டியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் சாலையில் ஜிம்னாஸ்டிக் செய்த டிக்டாக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது.

அதிக வரவேற்பைப் பெற்ற இந்த வீடியோவை, ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்கில் 5 முறை தங்கப் பதக்கம் வென்றவரான ரோமானியாவைச் சேர்ந்த நாடியா தனது ட்விட்டர் பக்கத்தில் 'அற்புதம்' என்று பாராட்டினார். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலானது.

மேலும், இந்த வீடியோ இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பார்வைக்குச் சென்றது.

இதுகுறித்து கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான நாடியா இதுகுறித்துப் பதிவிட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT