ஆந்திராவில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி ஒட்டி ஓட்டப்பட்ட போஸ்டரில் சானியா மிர்சாவை, பி.டி. உஷா என்று தவறுதலாக போட்டு போஸ்டர் ஒட்டியது சமூக வலைதளங்களில் ட்ரோலாக மாறியது.
வியாழக்கிழமை இந்தியா முழுவதும் தேசிய விளையாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையில் தலைசிறந்த சாதனையாளர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்கான வீரர்கள் பட்டியல் கடந்த 20-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய விளையாட்டு தினமான நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
மேலும் அந்தந்த மாநிலங்களிலும் விளையாட்டுவீரர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்ப்பில் கடற்கரை சாலையில், தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி சுவரொட்டிகள் ஒட்டபட்டிருந்தன. இதில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா புகைப்படத்தின் கீழ் இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனையான பி.டி உஷாவின் பெயரை பதிவிட்டிருந்தனர்.
இந்த தவறை சுட்டிக் காட்டி எதிர்க் கட்சிகள், பிரபலங்கள் என பலரும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை கிண்டலடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்தப் புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.
Epic