வயநாடு,
ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான வயநாட்டில் இன்று (புதன்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இளைஞர் ஒருவர் அன்பை வெளிப்படுத்த ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார்.
காரில் சென்று கொண்டிருந்தபோது முதலில் ராகுலுடன் கைகுலுக்கி ஆரவாரமடைந்த இளைஞர், கன்னத்தில் முத்தமிட்டார். எனினும் ராகுல் காந்தி இயல்பாக தொடர்ந்து மற்றவர்களுடன் கைகுலுக்கினார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
ராகுல் காந்தி எப்போதும் பொது இடங்களில் மக்களுடன் கலந்து பழகக்கூடியவர். பல நேரங்களில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சென்று மக்களுக்கு கை கொடுத்து பழகுவார்.
கடந்த பிப்ரவரி மாதம் குஜராத்தின் வல்சாட் பகுதிக்கு ராகுல் சென்றிருந்தபோது பெண் ஒருவர் மேடைக்கு ஏறி அவருக்கு மாலை அணிவித்ததோடு கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் ராகுல் சில நிமிடங்கள் வெட்கத்தில் ஆழ்ந்த வீடியோ, புகைப்படங்கள் அப்போது வெளியாகின.
தற்போது வயநாட்டில் இளைஞர் ஒருவர் அன்பை வெளிப்படுத்திய காட்சி வெளியாகியுள்ளது.
ராகுல் காந்திக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.