ஈரானில் ஜிம் ஒன்றில் காலை நேர உடற்பயிற்சியில் தமிழ் பாடல் ஒன்று ஒளிப்பரப்பு செய்யப்பட்டு நடனம் ஆடும் காட்சி வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் இன்று எந்த பாடல் எங்கு பிரபலமாகும் என்றும் யாராலும் கணிக்க முடியாது. அந்த வகையில் விஜயின் போக்கிரி படத்தில் இடப்பெற்றுள்ள மாம்பழமா பாடல் ஒன்று வைரலாகியுள்ளது.
அதுவும் ஈரானில் உள்ள, ஜிம் ஒன்றில் இந்தப் படலை காலை உடற்பயிற்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் பாடலை ஓடவிட்டு இதற்கு ஏத்த படியான நடன அசைவுகளை ஜிம்மின் பயிற்சியாளர் வாடிகையாளர்களுக்கு கற்பிக்கிறார்.
இந்த வீடியோவை அனு சேகல் என்ற பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த வீடியோவை மகேந்திர நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ”இனி நானும் படுகையிலிருந்து எழுந்திருந்து, தமிழ் பாடல்களை ஒளிப்பரப்பி புதிய நாளை சந்திக்க போகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.