எதிர்காலத்தில் என்னை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை என்றாலும் அது பெரிய விஷயம் இல்லை என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து இரு மாத காலம் ஓய்வுபெற்ற அவர் ராணுவத்தில் பணியாற்ற அனுமதி பெற்று அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு தற்போது ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார்.
மேலும், இந்திய ராணுவம் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் தோனி பங்கேற்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ராணுவத்தினருடன் தோனி பேசும்போது, “எதிர்காலத்தில் யாராவது என்னை விட சிறப்பாக விளையாடுவார்கள். நீங்கள் தற்போது பார்த்த விளையாட்டை விட சிறப்பான விளையாட்டைப் பார்க்க எதிர்காலத்தில் நிறைய பேர் இருப்பார்கள்.
ஒருவேளை என்னை எதிர்காலத்திலும் யாரும் நினைவு கொள்ளவில்லை என்றாலும் எனக்குப் பெரிய விஷயம் இல்லை” என்று தெரிவித்து இந்திப் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கம், ''எல்லாம் கொஞ்சம் நாள்தான் நண்பா'' என்று தலைப்பிட்டு பதிவிட்டிருந்தது.