சமையலறை

தீபாவளி நல்விருந்து! - சாமை முறுக்கு

ப்ரதிமா

ந்திய நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. புத்தாடை சரசரக்கக் குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்வார்கள் என்றால் பலகாரங்கள் செய்வதில் பெரியவர்களின் நேரம் போகும். வீட்டில் செய்யப்பட்ட விதவிதமான தின்பண்டங்களை உண்டும் பகிர்ந்தும் மகிழ்வது தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு அம்சம். இந்த ஆண்டு தீபாவளியின் சுவையைக் கூட்டச் சில புதுமையான, சுவைமிக்க தீபாவளி உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. பிரத்யேக சமையல் செய்முறைகளை யூடியூபிலும் இவர் வீடியோக்களாகப் பதிவிடுகிறார். kumbakonam rajapushpa kitchen என்கிற யூடியூப் முகவரியில் அவற்றைப் பார்க்கலாம்.

சாமை முறுக்கு

சாமை அரிசி - 2 கப்

பாசிப் பருப்பு - 1 கப்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

பெருங்காயப் பவுடர் - அரை டீ ஸ்பூன்

வெண்ணெய் - 5 டீ ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சாமையை அலசி காயவைத்துக்கொள்ளுங்கள். காயவைத்த சாமையோடு வறுக்காத பாசிப் பருப்பைச் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு மிஷினில் அரைத்துக்கொள்ளுங்கள். மாவுடன் சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். பின் வெண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். அதில் வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கெட்டியாக, கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவை முறுக்கு அச்சில் இட்டுப் பிழிந்து சூடான எண்ணெயில் போட்டு நன்றாக வெந்த பிறகு எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT