சமையலறை

வீடெல்லாம் மணக்கும் ஓணம்: சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டு

ப்ரதிமா

என்னென்ன தேவை?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு துருவல் - இரண்டு கப்

சர்க்கரை – அரை கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

நெய் – சிறிது

முந்திரிப் பருப்பு (உடைத்தது) - ஒரு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - இரண்டு

எப்படிச் செய்வது?

வள்ளிக் கிழங்குத் துருவலை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய பாத்திரத்தில் இதைப் போட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யில் முந்திரி, ஏலக்காய் வறுத்துச் சேர்த்துக் கிளறி பரிமாறுங்கள். சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம்.

SCROLL FOR NEXT