சமையலறை

வகை வகையான மதிய உணவு - வெஜ் ரோல்ஸ்

ஆதிரை வேணுகோபாலன்

என்னென்ன தேவை?

நறுக்கிய கோஸ், துருவிய கேரட் - தலா அரை கப்

நறுக்கிய குடமிளகாய் - கால் கப்

நறுக்கிய வெங்காயம்- 1 கப்

சீரகத் தூள், மிளகுத் தூள் - தலா 1 டீஸ்பூன்

சப்பாத்தி - 5

எண்ணெய், உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்றாக வதங்கியதும், சீரகத் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையில் சிறிது எடுத்து, சப்பாத்தியின் நடுவில் வைத்துச் சுருட்டவும். சுருட்டிய சப்பாத்திகளைக் குறுக்குவாட்டில் வெட்டி, பரிமாறவும்.

SCROLL FOR NEXT