என்னென்ன தேவை?
மைதா - கால் கிலோ
வனஸ்பதி - 100 கிராம்
ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 3 துளிகள்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
கெட்டித் தயிர் - ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
வாணலியில் வனஸ்பதியை ஊற்றி உருக்குங்கள். மைதா மாவுடன் தயிர், சமையல் சோடா, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைக் கலந்து, காய்ச்சிய வனஸ்பதி, வெனிலா எசென்ஸ் ஊற்றிப் பிசையுங்கள். இந்த மாவை நடுத்தரமாக உருட்டி, கால் அங்குல தடிமனில் சப்பாத்தியாக இட்டு, சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளுங்கள். சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து, பொடித்த சர்க்கரையில் புரட்டியெடுத்தால் சுவையான ஐஸ் பன் தயார்.
படங்கள்: எல். சீனிவாசன்