சமையலறை

கொல்கத்தா ஜீரா

ப்ரதிமா

என்னென்ன தேவை?

கோதுமை பிரெட் – 8 முதல் 10 துண்டுகள்

சர்க்கரை – கால் கப்

சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம்

பச்சை கற்பூரம் - சிறிதளவு

ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி – தலா ஒரு சிட்டிகை

முந்திரி - சிறிதளவு

நெய் - பொரிப்பதற்கு

பால் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பிரெட்டின் ஓரங்களை வெட்டியெடுத்து விட்டு, காய்ச்சி ஆறவைத்த பாலில் நனைத்தெடுங்கள். அகலமான தட்டில் பிரெட் துண்டுகளைப் போட்டு, கோவா, பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய்ப் பொடி சேர்த்து கட்லெட் அல்லது விருப்பமான வடிவில் உருட்டிக்கொள்ளுங்கள். இவற்றைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரையைக் கம்பிப் பாகு பதத்தில் காய்ச்சி, பொரித்த பிரெட் மேல் ஊற்றுங்கள். நெய்யில் வறுத்த முந்திரியை மேலே வைத்து, ஏலக்காய்ப் பொடியைத் தூவிப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT