சமையலறை

கோழி சூப்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

நாட்டுக் கோழி – கால் கிலோ (எலும்புடன்)

சின்ன வெங்காயம் – 12

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 2

பூண்டுப் பல் – 7

மிளகு (பொடித்தது) – ஒரு டீஸ்பூன்

சீரகப் பொடி – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

கறியைச் சுத்தம் செய்து முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து நசுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கினால் கோழி சூப் தயார். அல்லது குக்கரில் வைத்து விசில் வந்ததும் தீயைக் குறைத்து 15 நிமிடம் கழித்து இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT