சமையலறை

மரகதா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

புதினா இலைகள் – அரை கப்

எலுமிச்சை - 2

சர்க்கரை அல்லது தேன்

- 6 டீஸ்பூன்

கருப்பு உப்பு – அரை டீஸ்பூன்

மிளகு - 5

வறுத்த சீரகம் – ஒரு டீஸ்பூன்

குளிர்ந்த தண்ணீர் – 3 தம்ளர்

இஞ்சி – சிறு துண்டு

எப்படிச் செய்வது?

புதினா இலைகளோடு மிளகு, வறுத்த சீரகம், இஞ்சி, சர்க்கரை அல்லது தேன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரையுங்கள். நன்றாக அரைபட்டதும் மீதமுள்ள தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றியெடுத்து வடிகட்டிப் பரிமாறுங்கள். தயாரித்த உடனே குடித்துவிடுவதாக இருந்தால், எலுமிச்சைச் சாறு சேர்ப்பதற்குப் பதிலாக விதை நீக்கிய எலுமிச்சைத் துண்டுகளைச் சேர்க்கலாம். எலுமிச்சைத் துண்டுகளைச் சேர்ப்பதால் மணம் தூக்கலாக இருக்கும். ஆனால் எலுமிச்சைத் துண்டுகளை அதிகமாக அரைத்தாலோ அல்லது உடனே பரிமாறாமல் சற்று நேரம் வைத்தாலோ இந்தச் சாறு கசந்துவிடும்.



மீனலோசனி பட்டாபிராமன்

SCROLL FOR NEXT