என்னென்ன தேவை?
சர்க்கரை இல்லாத கோவா – கால் கிலோ
பொடித்த சர்க்கரை - 5 டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு
தேங்காய்ப் பூரணம் செய்ய:
துருவிய வெல்லம் - கால் கப்
தேங்காய்த் துருவல் – 6 டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு
எப்படிச் செய்வது?
வெல்லத்தைப் பாகாக்கி, தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். சர்க்கரை இல்லாத கோவாவுடன் சர்க்கரைப் பொடி, ஏலக்காய் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். இதனுள்ளே தேங்காய்ப் பூரணம் வைத்து கொழுக்கட்டை போலப் பிடியுங்கள். இதை ஆவியில் வேகவைக்கக் கூடாது. ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.