என்னென்ன தேவை?
காய்கறி கலந்து செய்த கோதுமை ரவை உப்புமா – ஒரு கப்
கடலை மாவு– அரை கப்
சுக்குப் பொடி, ஓமம்
– தலா அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு
– தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உப்புமா கொஞ்சம் சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். கடலை மாவில் சுக்கு, ஓமம், பெருங்காயம், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். உப்புமா உருண்டைகளை கடலை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.