என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 4
வெண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உருளைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளுங்கள். அதில் வெண்ணெய், வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து நன்றாக மசியுங்கள். நன்றாகத் திரண்டு வரும்போது அதைத் தட்டில் பரப்பி அதன் மேல் மல்லித் தழையைத் தூவுங்கள். விரும்பிய வடிவத்தில் நறுக்கிப் பரிமாறுங்கள்.
உருளைக் கிழங்கைக் குழைய வேகவைக்கக் கூடாது. இந்த உருளைக் கிழங்குடன் கூடுதலாக வெண்ணெய் சேர்த்து பிரெட், பனீர், சப்பாத்தி ஆகியவற்றில் இருபுறமும் தடவி ரோஸ்ட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.