சமையலறை

பிரெட் குல்ஃபி

ப்ரதிமா

என்னென்ன தேவை?

கோதுமை பிரெட் - 6 துண்டுகள்

பால் - அரை லிட்டர்

பாதாம் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

துருவிய பாதாம், பிஸ்தா

- தலா ஒரு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

சர்க்கரை - கால் கப்

குல்ஃபி மோல்டு, மண் பானை - 1

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

பாலில் ஏலக்காய்ப் பொடி போட்டு சுண்டக் காய்ச்சிக்கொள்ளுங்கள். இறக்கிவைத்து பாதாம் பவுடர், சர்க்கரை, துருவிய பாதாம், பிஸ்தா போட்டுக் கரைத்துக்கொள்ளுங்கள். பிரெட்டின் ஓரங்களை அகற்றி விட்டு, நன்றாகப் பொடித்து சூடான பாலுடன் கலக்குங்கள். குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் கரைத்து இந்தக் கலவையுடன் கலந்துகொள்ளுங்கள். கலவையை நன்றாக ஆறவையுங்கள். குல்ஃபி மோல்டில் கலர் சர்க்கரை உருண்டைகளை முதலில் போட்டு, குல்ஃபி கரைசலை ஊற்றுங்கள். இதை ஃபிரிட்ஜ் ஃபிரீஸரில் எட்டு மணி நேரம் வையுங்கள். குல்ஃபி அச்சு இல்லை என்றால், சின்ன மண்பானையில் இந்தக் கலவையை ஊற்றி 10 மணி நேரம் ப்ரீசரில் வைத்தால் அருமையான குல்ஃபி தயார். சர்க்கரைக்குப் பதிலாக, குறுக்கப்பட்ட பால் சேர்த்தால் சுவை இன்னும் கூடும்.

SCROLL FOR NEXT