சமையலறை

மோர் ரசம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மோர் – 2 கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு – ஒரு டீஸ்பூன்

மிளகு, சீரகம், துவரம் பருப்பு,

தனியா - தலா ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

ஓமம் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறு துண்டு

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் கடுகை வறுத்துக்கொள்ளுங்கள். மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியா, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் வறுத்தவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். இதை மோருடன் கலந்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். அதிகமாகக் கொதித்தால் திரிந்துவிடும். நல்லெண்ணெய்யில் ஓமம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டிப் பரிமாறுங்கள்.



மீனலோசனி பட்டாபிராமன்

SCROLL FOR NEXT