சமையலறை

உவர்ப்பு - தக்காளி ஊறுகாய்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தக்காளி - கால் கிலோ பூண்டு - 6 பல் காய்ந்த மிளகாய் - 6 வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன் புளி - சிறிதளவு பெருங்காயம் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உப்புதான் உவர்ப்புச் சுவையின் காரணகர்த்தா. அதனால் உப்பு தூக்கலாக உள்ள ஊறுகாய்களில் ஒன்றான தக்காளி ஊறுகாய் செய்வதைப் பற்றிப் பார்ப்போம். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து, பூண்டு, புளி, தக்காளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி வெந்தயப் பொடியைத் தூவி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கிவையுங்கள். இந்தத் தக்காளி ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

SCROLL FOR NEXT