சமையலறை

மாங்காய் வற்றல் குழம்பு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மாங்காய் வற்றல் துண்டுகள் - 6

புளி - எலுமிச்சை அளவு

வெல்லத் தூள் - ஒரு டீஸ்பூன்

உளுந்து, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

மிளகு – அரை டீஸ்பூன்

கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

மாங்காய் வற்றலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, வெந்தயம், பெருங்காயம் மூன்றையும் சேர்த்து வறுத்து பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். மாங்காய் வற்றலைச் சேர்த்து சற்று நேரம் கொதிக்கவையுங்கள். உளுந்து, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை எண்ணெயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். மாங்காய் வற்றல் புளிக்கரைசலில் நன்றாக வெந்ததும், இந்தப் பொடியைத் தூவி நன்றாகக் கிளறி இறக்கிக்கொள்ளுங்கள்.

வெல்லத் தூள் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டால் குழம்பு மணமாக இருக்கும்.

SCROLL FOR NEXT