சமையலறை

குழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள்! - பீட்ரூட் மில்க் ஷேக்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பீட்ரூட் - 1

தேங்காய் - அரை மூடி

நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன்

பேரிச்சம்பழம் - 4

ஏலக்காய் - 2

குங்குமப்பூ - சிறிதளவு

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டைத் தோல் சீவி, துருவி, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டுங்கள். தேங்காயைத் துருவி, அரைத்துப் பாலெடுத்துக்கொள்ளுங்கள். பீட்ரூட் சாறு, தேங்காய்ப் பால், நாட்டுச் சர்க்கரை, பேரிச்சம் பழம், ஏலக்காய் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு விப்பர் மோடில் சுற்றுங்கள். விரும்பினால் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, ஜில்லென்று பரிமாறுங்கள்.

விசாலா ராஜன்

SCROLL FOR NEXT