சமையலறை

பச்சை தக்காளி சட்னி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பச்சை நாட்டுத் தக்காளி - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 3

கடுகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:

கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியே வறுத்தெடுங்கள். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பிறகு நறுக்கிய தக்காளிக்காயைச் சேர்த்து வதக்கி, ஆறவிடுங்கள். வறுத்தெடுத்த பொருட்களை முதலில் போட்டு அரைத்துவிட்டு, பிறகு வதக்கிய தக்காளி கலவையைப் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுங்கள். பிறகு உப்பு, மல்லித் தழை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாக அரைத்தெடுங்கள். கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் கலந்துவிடுங்கள்.

ராஜகுமாரி

SCROLL FOR NEXT