சமையலறை

வெற்றிலை ரசம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கொழுந்து வெற்றிலை 4

புளி நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் 2

பெருங்காயம், கடுகு, மஞ்சள் தூள் சிறிதளவு

உப்பு, நெய் தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:

ஓமம் - அரை டீஸ்பூன்

மிளகு ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 2

எப்படிச் செய்வது?

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றுடன் வெற்றிலையையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். புளியைக் கரைத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். வாணலியில் நெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து ரசத்தில் ஊற்றுங்கள். அரைத்துவைத்திருக்கும் கலவையைச் சேர்த்து, எல்லாம் சேர்ந்து கொதிக்கத் தொடங்கியதும் இறக்கிவையுங்கள். இந்த ரசம் பசியைத் தூண்டும், சளியைப் போக்கும்.

- ராஜபுஷ்பா

SCROLL FOR NEXT