சமையலறை

கருப்பு உளுந்து பாயசம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கருப்பு உளுந்து - அரை கப்

காய்ச்சிய பால் - ஒரு லிட்டர்

வெல்லம் - அரை கப்

நெய் - 4 டீஸ்பூன்

முந்திரி - 10

திராட்சை - 25

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

உளுத்தம் பருப்பைச் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊறவிடுங்கள். பிறகு தண்ணீர் வடித்து, கெட்டியாக அரையுங்கள். வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்தெடுங்கள். அதே வாணலியில் உளுந்து மாவைச் சேர்த்துக் கிளறுங்கள். மிதமான தீயில் வெந்ததும் காய்ச்சிய பாலை ஊற்றி, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் ஏலக்காய்த் தூள், வறுத்துவைத்திருக்கும் முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கிவையுங்கள். சூடாகப் பருகினால் அமிர்தமாக ருசிக்கும். இனிப்பு விரும்புகிறவர்கள் கொஞ்சம் கூடுதலாக வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.

- சீதா சம்பத்

SCROLL FOR NEXT