சமையலறை

கூட்டாஞ்சோறு

செய்திப்பிரிவு

கூட்டாஞ்சோற்றைக் கதம்ப சாதம் என்றும் சொல்வார்கள். இது அரிசி, பருப்பு, பல வகை காய்கறிகள் சேர்ந்த ஒரு பூரண உணவு. இதைச் செய்வதும் சுலபம். சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது இது.

எப்படிச் செய்வது?

அரிசி மற்றும் பருப்பைச் சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து, மூன்று விசில் வரும்வரை வேகவையுங்கள். புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரையுங்கள். சின்ன வெங்காயத்தை மட்டும் சிறிதளவு நல்லெண்ணெயில் லேசாக வதக்கிச் சேர்த்து அரைக்கலாம்.

காய்கறிகளும் முருங்கைக் கீரையும் மூழ்கும்வரை தண்ணீர் விட்டு வேகவையுங்கள். முக்கால் பதம் வெந்ததும், புளிக் கரைசலையும் உப்பையும் சேருங்கள். ஐந்து நிமிடம் கழித்து, அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். வேகவைத்த அரிசி - பருப்புக் கலவையைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள். கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்துச் சேருங்கள். வெங்காய வடகம் இருந்தால் அதையும் தாளித்துச் சேர்க்கலாம். அது சுவையைக் கூட்டும்.

கூழ் வற்றல், வெங்காய வடகம், தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள். கூட்டாஞ்சோறு சாம்பார் சாதம் போல் குழைவாக இருக்கக் கூடாது. மாங்காய் சேர்ப்பதாக இருந்தால், மாங்காயின் புளிப்புச் சுவைக்கேற்ப புளியின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

- சங்கரி பகவதி

SCROLL FOR NEXT