என்னென்ன தேவை?
தேங்காய் - அரை மூடி
கசகசா - 2 டீஸ்பூன்
முந்திரி - 10
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
பட்டை - சிறு துண்டு
ஏலக்காய் - 1
சோம்பு - அரை டீஸ்பூன்
பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி
உருளைக் கிழங்கு - 1
காலிஃபிளவர் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 துளி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காய்கறிகளை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து தனியாக வையுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் ஏலக்காய், கிராம்பு, சோம்பு போட்டுப் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வதங்கிக்கொண்டிருக்கும் வெங்காயத்துடன் சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த காய்கறைகளைச் சேர்த்து வதக்குங்கள். தேங்காய், முந்திரி, கசகசா இவற்றை அரைத்து அதை வதங்கும் கலவையில் கொட்டிக் கிளறுங்கள். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவையுங்கள். பிறகு கொத்தமல்லி தூவி ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்துப் பரிமாறுங்கள். சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம், கல்தோசை, புலவ் அனைத்துக்கும் ஏற்றது இந்த குருமா.
சமையல் குறிப்பு - அம்பிகா