சமையலறை

தேங்காய் சாக்லேட் உருண்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தேங்காய்ப் பால் - 100 மி.லி.

ப்ரெஷ் கிரீம் - 60 மி.லி.

சாக்லேட் - 300 கிராம்

கொப்பரைத் தேங்காய் - 100 கிராம்

எப்படிச் செய்வது?

சாக்லேட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதைக் கொதிக்கும் நீரினுள் வைத்து டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக்கொள்ளுங்கள். தேங்காய்ப் பால், கிரீம் இரண்டையும் வைத்து எடுங்கள். உருக்கிய சாக்லேட் மீது சூடாக்கிய கிரீம் கலவையை ஊற்றி நன்றாகக் கலக்குங்கள்.

கொப்பரைத் தேங்காயைத் துருவி, இதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையை இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவையுங்கள். மறுநாள் காலை இந்தக் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT