சமையலறை

தூதுவளை கொழுக்கட்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தூதுவளை இலை கால் கப் (நறுக்கியது)

பச்சரிசி அரை கப்

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் அரை டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன்

நெய் சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசியை ஊறவைத்து அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டு தூதுவளை, வெங்காயம், தேங்காய்த் துருவல் மூன்றையும் சேர்த்து நிறம் மாறாமல் வதக்கி மாவுடன் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசையுங்கள். இந்த மாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேகவையுங்கள். இந்தக் கொழுக்கட்டை நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கும்.

SCROLL FOR NEXT