என்னென்ன தேவை?
மைதா - 300 கிராம்
சர்க்கரை - 60 கிராம்
ஈஸ்ட் - 15 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
உப்பு - 5 கிராம்
பால் பவுடர் - 20 கிராம்
டார்க் சாக்லேட் - 250 கிராம்
எண்ணெய் - அரை லிட்டர்
எப்படிச் செய்வது?
மைதாவை நன்றாகச் சலியுங்கள். எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் கலந்து மிருதுவாகப் பிசையுங்கள். அதிகத் தளர்வுடனும் இறுக்கத்துடனும் இருக்கக் கூடாது. இந்த மாவை அரை மணிநேரம் ஊறவிடுங்கள். பிறகு எடுத்துப் பார்த்தால் மாவு நன்றாக உப்பியிருக்கும். மாவிலிருந்து சிறிது எடுத்து சப்பாத்தி மாதிரி தேய்த்து, பெரிய பிஸ்கட் அளவுக்கு வட்டமாக வெட்டியெடுங்கள்.
சிறிய பாட்டில் மூடியை வைத்து நடுவே அழுத்தியெடுங்கள். இதைப் பத்து முதல் பதினைந்து நிமிடம் அப்படியே விடுங்கள். பிறகு லேசாக உப்பியிருக்கும். இதைச் சூடான எண்ணெயில் மிதமான தீயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சாக்லேட்டை வழக்கம் போல டபுள் பாயில் செய்து, பொரித்த டோனட்டுகளை அதில் முக்கியெடுங்கள். பிறகு விதவிதமாக அலங்கரித்துப் பரிமாறலாம்.