சமையலறை

சாக்லேட் குக்கீஸ்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வெண்ணெய் - 75 கிராம்

வெல்லம் - 65 கிராம்

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

முட்டை - 1

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

மைதா மாவு - 175 கிராம்

சாக்லேட் சிப்ஸ் - 100 கிராம்

எப்படிச் செய்வது?

வெண்ணெய், வெல்லம், வெனிலா எசென்ஸ் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் முட்டையைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். மைதா மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளுங்கள். இதை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். இதனுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து மெல்லிய பேப்பரால் சுற்றி (cling wrap), ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வையுங்கள்.

ஒரு டிரேயில் பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது சிறிது வெண்ணெய் தடவுங்கள். ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த மாவைப் பிசைந்து ஓரளவு தடிமனாகத் தட்டி, குக்கீஸ் கட்டரால் வட்டமாக வெட்டுங்கள். இல்லையென்றால் சப்பாத்திக் கட்டையில் சிறிது சோள மாவைத் தூவி அதில் இந்தக் கலவையை வைத்து உருட்டி, விரும்பிய வடிவத்தில் வெட்டியெடுக்கலாம். இவற்றை டிரேயில் வைத்து, மைக்ரோவேவ் அவனில் வைத்து 175 டிகிரி வெப்ப நிலையில் பதினைந்து நிமிடங்கள் பேக் செய்து எடுங்கள். குக்கீஸின் ஓரம் பிரவுன் நிறமாக மாறும்வரை பேக் செய்வது நல்லது.

SCROLL FOR NEXT