சமையலறை

டயட் சூப்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

முட்டைக்கோஸ் துருவியது - ஒரு கப்

கொத்தமல்லித் தழை - அரை கப்

தக்காளி - 1

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 10 பல்

சீரகம் - 2 டீஸ்பூன்

மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உப்பு, மிளகுத் தூள் தவிர மீதியுள்ள பொருட்களை குக்கரில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். இரண்டு விசில் வந்ததும் இறக்கிவையுங்கள். சூடு குறைந்ததும் குக்கரைத் திறந்து, உள்ளே இருக்கும் கலவையை ஒரு குழிக் கரண்டியின் அடிப்பாகத்தால் நன்கு மசியுங்கள். அதை வடிகட்டி மிளகுத் தூள், உப்பு சேர்த்துக் கலந்து, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது சிறிது வெண்ணெய் போட்டுக் கொடுக்கலாம். முட்டைக்கோஸ், மல்லித்தழை இரண்டும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளைச் சீர்ப்படுத்தும்.

- பிருந்தா ரமணி

SCROLL FOR NEXT