என்னென்ன தேவை?
வெந்தயப் பொடி 1 கப்
பனை வெல்லம் 3 கப்
நல்லெண்ணெய் 1 கப்
எப்படிச் செய்வது?
வெந்தயத்தை முளை கட்டி, உலரவைத்து, பொடித்துக்கொள்ளுங்கள். பனை வெல்லத்தைத் தூள் செய்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள். வெந்தயப் பொடியில் கால் கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து வெந்தயக் கரைசல், பனை வெல்லம், நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். வாணலியில் ஒட்டாத பதம் வரும்வரை கிளறி இறக்குங்கள். (வெந்தயத்தை முளைகட்ட முடியாதவர்கள் அதை ஊறவைத்து தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளலாம்.)
இந்தக் களி, நார்ச் சத்து நிறைந்தது. மலச்சிக்கலைத் தவிர்க்கும். எலும்புகள், மூட்டுகளுக்கு வலு கொடுக்கும்.
- ராஜபுஷ்பா