சமையலறை

பொரிகடலை தட்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

அரிசி மாவு - ஒரு கப்

பாதாம் பருப்பு - 20

பொரிகடலை மாவு - கால் கப்

கடலைப் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

கறுப்பு எள் - 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை ஊறவைத்துக்கொள்ளுங்கள். பாதாம் பருப்பை வெந்நீர் ஊற்றி, அரை மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு தோலுரித்து, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். அரிசி மாவு, அரைத்த விழுது, பொரிகடலை மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், எள் , ஊறவைத்த கடலைப் பருப்பு, உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து எண்ணெய் தடவிய வாழையிலையில் வைத்து வட்டமாகத் தட்டுங்கள். இதைச் சூடான எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுங்கள்.

- பிருந்தா ரமணி

SCROLL FOR NEXT