சமையலறை

கல்யாண முருங்கை இலை சூப்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கல்யாண முருங்கை இலை 10

சின்ன வெங்காயம் 8

தக்காளி 1

காய்ந்த மிளகாய் - 2

மிளகு, சீரகம் தலா அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

புதினா, மல்லித் தழை சிறிதளவு

நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கல்யாண முருங்கை இலையை அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தைப் பொடித்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளியுங்கள். பிறகு மிளகு, சீரகப் பொடி, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் கல்யாண முருங்கை இலை, புதினா, மல்லித் தழை சேர்த்து லேசாக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

இந்தக் கல்யாண முருங்கை இலை சூப், இரும்புச் சத்து நிறைந்தது. பித்தத்தைப் போக்க வல்லது. சிறுநீரைப் பெருக்கும்.

- ராஜபுஷ்பா

SCROLL FOR NEXT