என்னென்ன தேவை?
இட்லி அரிசி - ஒரு கப்
முள்ளு முருங்கை இலை - 15
பொரிகடலைப் பொடி - கால் கப்
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம், சுக்குப் பொடி - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
இட்லி அரிசியை நன்றாக ஊறவைத்து, அதனுடன் ஆய்ந்து சுத்தப்படுத்திய முள்ளு முருங்கை இலைகள், மிளகு, சீரகம், சுக்குப் பொடி, உப்பு சேர்த்து அரையுங்கள். அரைத்த உடனேயே தோசை வார்க்கலாம். தோசை ரோஸ்ட் போல் மெலிதாக வேண்டும் என்றால் மாவை நீர்க்கக் கரைத்துக்கொள்ளுங்கள்.
இந்தத் தோசை சளி, இருமலுக்கு நல்லது. எங்கள் அம்மா இதில் உப்பும் பொரிகடலையும் சேர்க்காமல் அரைத்து, அடை போல கனமாக வார்த்துத் தருவார்கள். நாட்டுச் சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிடுவோம்.
- பிருந்தா ரமணி