என்னென்ன தேவை?
பூசணித் துண்டுகள் - 2
பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு - தலா அரை கப்
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி - சிறு துண்டு
வெங்காயம் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பூசணிக்காயைத் தோல்சீவி, துருவிக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, அவற்றுடன் காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். துருவிய பூசணியைத் தண்ணீரைப் பிழிந்து, வடை மாவுடன் சேர்த்துப் பிசையுங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்த்து, நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
- வரலட்சுமி