சமையலறை

முருங்கைக் கீரை உசிலி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

முருங்கைக் கீரை - 2 கப்

துவரம் பருப்பு - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - 4

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

கடுகு - அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முருங்கைக் கீரையை நன்றாக ஆய்ந்து, அலசி வேகவையுங்கள். துவரம் பருப்பை ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு போட்டுத் தாளியுங்கள். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, உதிரியாக வந்ததும் வேகவைத்திருக்கும் கீரையைச் சேர்த்து (தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்) எண்ணெய் விட்டு, நன்றாகப் புரட்டியெடுங்கள். விரும்பினால் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்.

- வரலட்சுமி

SCROLL FOR NEXT