சமையலறை

கோதுமை ரவை பாயசம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கோதுமை ரவை - அரை கப்

வெல்லம் - கால் கப்

முந்திரி - 10

திராட்சை - 25

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

முதல் தேங்காய்ப் பால் - அரை கப்

இரண்டாம் பால் - ஒரு கப்

நெய் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கோதுமை ரவையை வெறும் வாணலியில் பொன்னிறமாகும்வரை வறுத்தெடுங்கள். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைக் கரையவிட்டு வேகவைத்த கோதுமை ரவையை அதில் சேர்த்துக் கலக்குங்கள். இரண்டாம் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். பாயசம் போல வந்ததும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி இறக்கிவையுங்கள். வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பரிமாறலாம்.

          
SCROLL FOR NEXT