என்னென்ன தேவை?
அரிசி மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
வெல்லம் - முக்கால் கப்
வாழைப்பழம் - 1
தேங்காய்த் துருவல் - அரை கப்
நெய் - 4 டீஸ்பூன்
எள் - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 10
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி மாவு, கோதுமை மாவு, வெல்லம், மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துருவல், நெய், எள், முந்திரிப் பருப்பு, ஏலக்காய்ப் பொடி இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டுக் கெட்டியாக இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். இதை மூடிவைத்து பத்து நிமிடம் ஊற விடவும். பணியாரச் சட்டியில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் மாவு கலவையை அரைக் குழி நிரம்பும் அளவுக்கு ஊற்றுங்கள். வெந்ததும் திருப்பிவிடுங்கள். பொன்னிறமானதும் எடுத்துவிடலாம்.