சமையலறை

காரக் கொழுக்கட்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வேகவைத்த மரவள்ளி - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

தேங்காய்த் துருவல் - அரை கப்

பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு கப்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

சீரகம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

அரிசிமாவு - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு போட்டுக் கொதிக்கவிடுங்கள். அதில் அரிசி மாவைக் கொட்டிக் கிளறுங்கள். வெந்ததும் இறக்கிவையுங்கள்.

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, மல்லித்தழை, மரவள்ளிக் கிழங்கைச் சேர்த்து மீண்டும் ஒருமுறை சுற்றியெடுத்தால் பூரணம் தயார். அரிசி மாவு சிறிதளவு எடுத்து சொப்பு செய்து, நடுவே ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேகவையுங்கள். காரமும் மணமும் நிறைந்த இந்தக் கொழுக்கட்டையை மாலை நேர சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.

SCROLL FOR NEXT