சமையலறை

உக்காரை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு 1 கப்

கடலைப் பருப்பு அரை கப்

துவரம் பருப்பு கால் கப்

வெல்லம் 2 கப்

பொடித்த ஏலக்காய் அரை டீஸ்பூன்

வறுத்த முந்திரி சிறிதளவு

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகளைச் சிறிது நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை ஆவியில் வேகவைத்து ஆறியதும் நன்றாக உதிர்த்துக்கொள்ளுங்கள். வெல்லத்தில் பாகு காய்ச்சி ஏலக்காய்ப் பொடி, முந்திரி சேர்த்துக் கிளறுங்கள். உதிரியாக வரவில்லை என்றால் அடுப்பில் கொஞ்ச நேரம் வைத்துக் கிளறுங்கள்.

SCROLL FOR NEXT