சமையலறை

மரவள்ளிக் கிழங்கு வடை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி - 2 கப்

மரவள்ளித் துருவல் - ஒரு கப்

துவரம் பருப்பு - கால் கப்

காய்ந்த மிளகாய் - 4

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக, கெட்டியாக அரையுங்கள். மரவள்ளியைத் தோல்சீவித் துருவிக்கொள்ளுங்கள்.

அரைத்த மாவுடன் மரவள்ளித் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகுத் தூள், மல்லித்தழை சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

SCROLL FOR NEXT