என்னென்ன தேவை?
ரவை, சர்க்கரை - தலா ஒரு கப்
வாழைப்பழம் - 2
ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
ரவையை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்தெடுங்கள். வாணலியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள். ரவையை அதில் தூவி, கட்டியில்லாமல் கிளறுங்கள். கெட்டியாக வரும்போது மசித்த வாழைப்பழம், (பழத்தைக் கரண்டியால் அழுத்தி மசித்துக்கொள்ளுங்கள்) ஏலக்காய்ப் பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து, நெய் விட்டுக் கிளறுங்கள். கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவையுங்கள்