சமையலறை

வேர்க்கடலை வெண் சுண்டல்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வேர்க்கடலை - அரை கப்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுந்து - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கேரட், குடை மிளகாய்- தலா ஒன்று

இஞ்சி - சிறு துண்டு

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். இதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். ஆறியதும் திறந்து தண்ணீரை வடிகட்டுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளியுங்கள். கடுகு போட்டு வறுபட்டதும் உளுந்து, பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுங்கள். கறிவேப்பிலை, கேரட் துண்டுகள், குடை மிளகாய் துண்டுகள், இஞ்சி போட்டு சூடுபடக் கிளறுங்கள். உப்பு கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறுங்கள். வேகவைத்த வேர்க்கடலையை இதில் கொட்டிக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கிவையுங்கள்.

SCROLL FOR NEXT