சமையலறை

எள்ளுருண்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வெள்ளை எள், வெல்லம் தலா 1 கப்

பொட்டுக்கடலை - சிறிதளவு

பொடித்த ஏலக்காய் அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

எள்ளைச் சுத்தம் செய்து தண்ணீரில் அலசி, சிறிது நேரம் கழித்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு நன்றாக வெடிக்கும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள். வெல்லத்தில் கெட்டிப் பாகு வைத்து அதில் அரைத்த எள்ளுப் பொடி, பொட்டுக்கடலை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து உருண்டை பிடியுங்கள்.

SCROLL FOR NEXT