சமையலறை

பால் கேசரி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வறுத்த ரவை அரை கப்

பால் 2 கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

நெய் அரை கப்

துருவிய பாதாம் சிறிதளவு

ஏலக்காய்ப் பொடி அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாலைக் கொதிக்க விட்டு, அதில் ரவையைச் சேர்த்துக் கிளறுங்கள். ரவை வெந்தவுடன், சர்க்கரை சேர்த்துப் பின் நெய் சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள். இறக்கியதும் துருவிய பாதாம் பருப்பை சேர்த்துப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT