என்னென்ன தேவை?
மரவள்ளிக் கிழங்கு - 1
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடலைப் பருப்பு, உளுந்து - தலா 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
மரவள்ளிக் கிழங்கைத் தோல்சீவி, துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடுங்கள். வெந்ததும் வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, வேகவைத்த கிழங்கைச் சேர்த்துப் புரட்டுங்கள். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.