என்னென்ன தேவை?
கோதுமை ரவை - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
கடுகு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். பிறகு பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போடுங்கள். கோதுமை ரவையை அதில் கொட்டிக் கிளறி பாதி வேக்காடு வந்ததும் இறக்கிவையுங்கள்.
இதில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி கை பொறுக்கும் சூட்டில் கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் வேகைவயுங்கள். உப்புமா சாப்பிட அடம்பிடிக்கிறவர்களும் இந்தக் கொழுக்கட்டையை விரும்பிச் சுவைப்பார்கள்.